


திருப்பூரில் பத்திரப்பதிவுத்துறையைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆவண எழுத்தாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் நெசவாளி நகரில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். செயலாளர் யுவராஜ், பொருளாளர் பத்மா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
பத்திரப்பதிவுத்துறையைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும், ஆவண எழுத்தாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.









Leave a Reply