பாண்டி மெரினா பகுதியில் தனியார் படகு சவாரி அலுவலகங்கள் செயல்பட்டு வரும் கீற்றுக் கொட்டகைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு அலுவலகத்தின் மீது பட்டாசுப் பொறி பட்டதால் தீப்பற்றத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. மளமளவெனப் பரவிய தீயால் அடுத்தடுத்த அலுவலகங்களும் தீப்பற்றி எரிந்தன.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் மொத்தம் 6 அலுவலகங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. பட்டாசுப் பொறியால் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink1








Leave a Reply