நீதி கோரி திமுக மாணவர் அணி போராட்டம்!


கோவை ஒத்தக்கால்மண்டபத்தில், ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி விசாரணை கோரியும், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தலைமை தாங்கினார் ஒத்தக்கால்மண்டபம் பேரூர் கழக செயலாளர் கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார்.
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆ.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் துரை செந்தமிழ்செல்வன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல், கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அந்தோணி ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநில மாணவர் அணி செயலாளர் ஜெ.வீரமணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் குட்டி என்கிற சுதாகர், மாநில ஆதிதிராவிடர் நல அணி துணைச் செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் திமுகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பகுதி நிர்வாகிகள், மாணவர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, கோவை தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சூலூர் ஆர்.பிரபு நன்றி உரையாற்றினார்.









Leave a Reply