கோவையில் மாணவர்கள் கையில் உலக நாடுகளின் குரல்!

கோவை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளியில், “Educate and Illuminate 2026” என்ற கருத்தாக்கத்துடன் இரண்டு நாள் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாடு – SBOAMUN 2026 நடைபெற்று வருகிறது.

மாநாட்டின் தொடக்க விழாவில் ஐ.நா. கீதம் இசைக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் ஸ்ரீமதி சபுரால் பானு இப்ராஹிம், பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

தொடர்ந்து SBOAMUN 2026-ன் அதிகாரப்பூர்வ காணொலி முன்னோட்டம் வெளியிடப்பட்டு, மாநாட்டின் பொதுச் செயலாளர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்ட மாணவர்களுக்கு, குழுத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற குழு அமர்வுகளில், சர்வதேச விவகாரங்கள் குறித்து மாணவர்கள் ஆர்வத்துடன் விவாதித்தனர்.

மாணவர்களின் பேச்சாற்றல், தலைமைப் பண்பு, விவாதத் திறன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்த புரிதலை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.