திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தவறான ஊசி செலுத்தப்பட்டதால் தமக்கு வித்தியாசமான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தனது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து மீட்டனர்.
பின்னர் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply