பேரூர் வியாபாரிகள் சங்க 13-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோலாகலம்!

கோவை மாவட்டம், பேரூர் காமாட்சி மண்டபத்தில் பேரூர் வியாபாரிகள் சங்கத்தின் 13-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், சங்க அலுவலக கல்வெட்டு திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா மிக விமரிசையாக நடைபெற்றது.

​இவ்விழாவிற்கு சங்கத்தின் தலைவர் திரு. V.C. நடராஜன் அவர்கள் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். முன்னதாக, பொதுச்செயலாளர் திரு. கே. சிவக்குமார் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.

​இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ‘தென்பாண்டி சிங்கம்’ திரு. A.M. விக்ரம் ராஜா அவர்கள், சங்கக் கொடியினை ஏற்றி வைத்து, புதிய சங்க அலுவலக கல்வெட்டினைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.​
அவர் தனது உரையில், வணிகர்களின் உரிமைப் போராட்டங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பேரூர் பகுதியின் வியாபாரிகள் நலன் குறித்தும் விரிவாகப் பேசினார்.

​இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், வணிகப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சருமான திரு.எஸ் பி வேலுமணி அவர்கள்.இவ்விழாவிற்கு வருகை தந்தார்.

கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொறுப்பு அமைச்சர்
திரு மே சம்பத்குமார் அவர்களின் தலைமையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.