திமுகவில் அதிரடி அமைப்பு மாற்றம்: மாவட்டச் செயலாளர்களுக்கு 70 வயது வரம்பு!

திமுகவில் கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, மாவட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆகவும், உள்ளூர் கட்சி அமைப்புகளின் நிர்வாகப் பொறுப்புகளுக்கான வயது வரம்பு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய வயது வரம்புகள் அமலுக்கு வந்தால், தற்போது பொறுப்பில் உள்ள பல மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளித்து, கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுகவின் அடுத்தகட்ட நிர்வாக மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.