கோவையில் மாணவர்கள் தங்கும் இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை!

‘போதைப்பொருள் இல்லா கோவை’ இயக்கத்தின் கீழ், கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். கோவையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர் தங்குமிடங்கள் மற்றும் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பதுக்கல் தொடர்பாக ஆய்வு செய்தனர்.
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.