திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே வேஸ்ட் குடோனில் திடீர் தீ!

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வேஸ்ட் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வேஸ்ட் பொருட்கள் தீப்பற்றி மளமளவென எரிந்து வருகின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.