வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து – சுற்றுவட்டார பகுதிகளில் பரவிய கடும் புகை

கோவை மாநகரில் அதிகளவில் குப்பைகள் தேங்கும் வெள்ளலூர் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
காலை 6 மணியளவில், கிடங்கில் நீண்ட நாட்களாக தேங்கியிருந்த பழைய குப்பைகள் குவிக்கப்பட்டுள்ள பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்ததுடன், சுற்றுவட்டார பகுதிகளுக்கும் கடும் புகை பரவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்திலும் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.