கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எச்.ஐ.வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி!

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (TANSACS) மற்றும் கோவை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு (DAPCU) சார்பில், எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

​இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணியும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதில் நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு விழிப்புணர்வுப் பேரணியை முன்னெடுத்தனர்.
​கிராமிய கலை நிகழ்ச்சிகள்:
நேரு விழிப்புணர்வு கலைக்குழு சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கிராமிய குழுவின் தலைவர் திருமதி ராணி அவர்களின் தலைமையில் கலைஞர்கள் பங்கேற்றனர்.

கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் வாயிலாக நோய்த்தொற்று தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு செய்திகள் பொதுமக்களுக்கு மிகத் தெளிவாகக் கொண்டு சேர்க்கப்பட்டன.

பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நிகழ்ச்சி, எச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய்கள் குறித்த புரிதலை ஏற்படுத்த பெரும் உதவியாக அமைந்தது.