தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்திக்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நியாயமான குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரும் அவர்கள், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக கட்சித் தலைவர் விஜய் நேரில் சந்தித்து முறைப்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என 23 தூய்மைப் பணியாளர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
விஜய் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளதால், இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.