வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள அனுசுயா அறுசுவை அசைவ விருந்து ஹோட்டலில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி முனுசாமி என்பவர் தனது உறவினருடன் உணவருந்த சென்றுள்ளார்.
அப்போது பரோட்டா, ஆம்லெட் மற்றும் சிக்கன் பக்கோடா ஆகியவற்றை ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. முதலில் பரோட்டா மற்றும் ஆம்லெட் வழங்கப்பட்ட நிலையில், அவற்றை சாப்பிட்டு முடித்த பிறகே சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் அதிருப்தியடைந்த முனுசாமி, “சாப்பிடும்போதே பக்கோடா கொடுத்திருக்க வேண்டும்; சாப்பிட்டு முடித்த பிறகு கொடுத்தால் எப்படி சாப்பிடுவது?” என ஹோட்டல் நிர்வாகியிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது ஹோட்டல் நிர்வாகி முனுசாமியை ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், காட்பாடி காவல்துறையினர் ஹோட்டல் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு பரிமாறிய விவகாரத்தில் தொடங்கிய வாக்குவாதம், காவல் நிலைய வழக்கு வரை சென்ற சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடி ஹோட்டலில் உணவு தாமதம் குறித்து கேட்டவருக்கு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்? – நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply