நொய்டாவில் 6 வயது சிறுமி கொலை வழக்கு போலீசாரை தாக்க முயன்ற குற்றவாளி சுட்டுக்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன சிறுமியின் உடல் சாக்குமூட்டையில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பல்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின்போது, அவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதத்தை காட்டுவதற்காக போலீசார் அவரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.
இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பல்ராஜ் காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நொய்டாவில் 6 வயது சிறுமி கொலை வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.