ரூ.400 கோடி லஞ்சப் புகார் வழக்கு – நவம்பர் 6 வரை அன்பில் மகேஷுக்கு நீதிமன்றக் காவல்!

ரூ.400 கோடி லஞ்சப் புகார் வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, அன்பில் மகேஷின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையையும் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மேலும், போலீஸ் காவலில் இருந்தபோது அவருக்கு முறையாக உணவு வழங்கப்பட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அன்பில் மகேஷ், தனக்கு முறையாக உணவு வழங்கப்பட்டதாகவும், போலீசார் தன்னை எந்தவிதத்திலும் துன்புறுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அன்பில் மகேஷை வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் அடுத்தகட்டமாக என்ன நடக்கப்போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.