ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு! Z பிரிவு வாபஸ் – எஸ்.ஐ. தலைமையில் 4 போலீசார் பாதுகாப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த Z பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில், இனி அவருக்கு எஸ்கார்ட் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, எஸ்.ஐ. தலைமையில் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
ஸ்டாலினுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.