கோவையில் ஒரே நம்பரில் 2 பைக்குகள்! விசாரணையில் சிக்கிய 2 இளைஞர்கள் – வாகனங்கள் பறிமுதல்

கோவையில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு பைக்குகள் பயன்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கோவை மாநகர் போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஒரே பதிவு எண்ணை பயன்படுத்தியதாக கூறப்படும் இரண்டு இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும், அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் இரண்டு பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
விசாரணை முழுமையாக முடிந்த பின்னர், உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே பதிவு எண்… இரண்டு பைக்குகள்! இந்த விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.