பள்ளத்தை சரிசெய்யக் கோரி ஒருவர் நூதன எதிர்ப்பு!

ஹைதராபாத்தில் சாலையில் உள்ள பெரிய பள்ளத்தை சரிசெய்யக் கோரி ஒருவர் நடத்திய நூதன போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்லிபன்–புத்லிபௌலி சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்திற்கு அருகே அமர்ந்த அந்த நபர், சாலை சீரமைக்கப்படும் வரை அங்கிருந்து செல்லப்போவதில்லை என தெரிவித்தார்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனிடையே, சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக சரிசெய்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஜி.எச்.எம்.சி. ஆணையரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.