கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார், பொது இடங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளின் பயன்பாட்டிற்கான நடைபாதைகளை ஆக்கிரமிக்கக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.