திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் பகுதியில், நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக வி.ஏ.ஓ. அருண்குமார் மீது புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் நிலையில், 34 வயதான வி.ஏ.ஓ. அருண்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










Leave a Reply