கொளத்தூரில் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து! ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

சென்னை கொளத்தூரில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
பேருந்தில் தீப்பற்றியதை அறிந்த ஓட்டுநர், உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.