எஸ்.எஸ்.வி.எம். ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு – 3ம் நாள்

கோவை, செப்.2: கோவை எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் ‘ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு 2026’ன் 3ம் நாள் நிகழ்ச்சி, ‘எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்றது.

ஆரோக்கியம், உடற்பயிற்சி, தொழில்முனைவு, பாரம்பரிய அறிவு மற்றும் மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரைப்பை மற்றும் குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் பால் மாணிக்கம், குடல்–மூளை தொடர்பு மற்றும் குடல் ஆரோக்கியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

தொழில்முனைவோர் சர்வேஷ் சஷி, வாய்ப்புகளை அடையாளம் கண்டு பயனுள்ள தீர்வுகளை உருவாக்குவதே உண்மையான தொழில்முனைவு என எடுத்துரைத்தார். தொடர்ந்து கல்வியாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ‘இன்ஸ்பிரேஷனல் குரு விருதுகள்’ வழங்கப்பட்டன.

மாணவர் தொழில்முனைவோர் விருதில், முதல் பரிசாக ரூ.1 லட்சம் ரீட்ஸ் வேர்ல்ட் ஸ்கூல் ‘டீம் ரீ:ஜீரோ’ மாணவர்கள் தனா ஏ.ஏ., மைத்யரன் பொன்ராஜ், ஹர்ஜீத் கே.ஏ., எம். ஸ்ரீ ராம் சஹிஷ்ணு ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 2ம் பரிசு ரூ.75 ஆயிரம் எஸ்.எஸ்.வி.எம். மேட்டுப்பாளையம் ‘டீம் கிரெட் எக்ஸ்’ மாணவர்கள் தர்ஷன் செல்வராஜ், மிதுன் ராஜ் என்.எஸ். ஆகியோருக்கும், 3ம் பரிசு ரூ.50 ஆயிரம் ‘டீம் மாற்றம்’ மாணவர்கள் ராம் சரவணன் ஏ., ரிதுன் எஸ்., விவான் வி.ஆர்., கேசவ வர்தனா கே., அஸ்வந்த் குமார் ஜே. ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

நிறைவில் எஸ்.எஸ்.வி.எம். முன்னாள் மாணவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. எஸ்.எஸ்.வி.எம். நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் மணிமேகலை மோகன், மாணவர்கள் புதியவற்றை கற்று, சூழ்நிலைக்கு ஏற்ப மாறி, தங்களுக்கான சொந்தப் பாதையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.