கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் பேக்குகள் உரிய நேரத்தில் வந்து சேராததால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக, நாம் தமிழர் கட்சியின் கையூட்டு பாசறை பொறுப்பாளர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மதுக்கரை துணை அஞ்சலகத்திற்கு காலை 8.20 மணியளவில் வர வேண்டிய பேக்குகள், தாமதமாக சுமார் 10.30 மணியளவில் வருவதாகவும், இதனால் அஞ்சலக சேவைகளைப் பெற வரும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மதுக்கரை துணை அஞ்சலகத்தில் இருந்து கிளை அஞ்சலகங்களுக்கு அனுப்பப்படும் பேக்குகள் பிற்பகல் 12.30 மணியளவில் செல்வதால், பணம் எடுப்பது உள்ளிட்ட அஞ்சலக சேவைகளைப் பெறுவதில் பொதுமக்களுக்கு காலதாமதம் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக க.க. சாவடி கிளை அஞ்சலகத்திற்கு பேக்குகள் வரும் நேரத்திற்கும், அவற்றை திருப்பி அனுப்ப வேண்டிய நேரத்திற்கும் இடையே குறுகிய கால அவகாசமே இருப்பதாகவும், இதனால் பொதுமக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பல்வேறு அதிகாரிகளிடம் புகார்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களை விரிவாக்கம் செய்து, தேவையான இடங்களில் துணை அஞ்சலகங்களாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அஞ்சல் துறையில் நிலவும்தாக கூறப்படும் நிர்வாக சீர்கேடுகள் குறித்து மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply