“காதலனுக்கு பைக் வாங்க ஆசை… நகைக்கடையில் இல்லை, வீட்டிலேயே ‘ஷாப்பிங்’! 9 சவரன் நகை திருடிய மாணவி கைது!”

காதலனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை, கல்லூரி மாணவியை சிக்கலில் சிக்க வைத்துள்ளது!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தந்தையின் நண்பர் வீட்டில் இருந்த 9 சவரன் நகையை மாணவி திருடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருடிய நகையை விற்று கிடைத்த பணத்தில், காதலனுக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, கல்லூரி மாணவியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இளைஞர் தலைமறைவாக இருப்பதால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காதலனுக்கு பைக் வாங்க நினைத்த ஆசை… கடைசியில் மாணவிக்கு கம்பி எண்ணும் நிலை!