வால்பாறை மலைப்பாதையில் கம்பீரமாக அமர்ந்த சிறுத்தை! கொட்டாவி விட்டபடி ஹாயாக ஓய்வெடுக்கும் காட்சி வைரல்!

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில், நள்ளிரவில் சாலையோரத் தடுப்புச்சுவரில் சிறுத்தை ஒன்று மிகவும் சாதாரணமாகவும், கம்பீரமாகவும் அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் வாகனங்களின் வெளிச்சத்தையும் பொருட்படுத்தாமல், அந்தச் சிறுத்தை கொட்டாவி விட்டபடி ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது வாகனத்தில் சென்றபோது, இந்த அதிசயக் காட்சியைக் கண்டு வியந்து, அதனைத் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.