கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு! உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பெரியசாமி, தன்னை தாக்கியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்ட பெரியசாமி, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததே காரணம் என ஆட்டோ ஓட்டுநர் புகார் தெரிவித்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.