பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் லஞ்சப் புகாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேப்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த செல்வகுமார், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பணிகளை மேற்கொள்வதற்காக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்ட நிலையில், லஞ்சப் புகாருக்கு ஆளான BDO செல்வகுமாரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசுப் பணிகளில் முறைகேடு மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பாக அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லஞ்சப் புகாரில் BDO சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










Leave a Reply