பாலமலை அரகநாதர் சுவாமி கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் சென்ற 407 வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் இருந்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பாலமலை அரகநாதர் சுவாமி கோவிலுக்கு உழவாரப்பணி செய்வதற்காக 407 வாகனத்தில் பலர் வந்துள்ளனர்.
உழவாரப்பணி முடிந்த நிலையில், இன்று சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வாகனத்தின் பிரேக் செயலிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணம் செய்த 22 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம் கே.ஆர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலமலை கோவில் உழவாரப்பணி முடித்து திரும்பிய வாகனம் கவிழ்ந்து விபத்து! 22 பேர் லேசான காயம்!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply