சென்னை காட்டாங்குளத்தூர் அருகே அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதியதில், பைக்கில் சென்ற 26 வயது இளைஞர் இறையன்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
3 நாட்கள் சட்டப்பேரவை விடுமுறைக்குப் பிறகு, அமைச்சர் ஜெகதீஸ்வரி குடும்பத்துடன் விருதுநகரில் இருந்து சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது. அமைச்சர் அரசு காரில் பயணித்த நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றொரு காரில் வந்துள்ளனர்.
இந்த நிலையில், காட்டாங்குளத்தூர் அருகே அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயரில் இருந்ததாக கூறப்படும் கார், பைக்கில் சென்ற இறையன்பு மீது மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இறையன்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட காரை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










Leave a Reply