கோவையில் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையைத் தடுக்கக் கோரி, இருகூர் மற்றும் இருகூர் பாளையம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாகி வருவதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் சிமெண்ட் ஆலையின் நச்சுப் புகை! மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனு – நடவடிக்கை இல்லையெனில் போராட்டம் எச்சரிக்கை!

What’s your reaction?
Love0
Sad1
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply