ரீல்ஸ் பார்த்தது தொடர்பாக தகராறு.. மனைவியை பீர் பாட்டிலால் தாக்கி கொன்ற கணவர்! பின்னர் தற்கொலை

பெங்களூருவில் செல்போனில் ரீல்ஸ் பார்த்தது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு, சோகத்தில் முடிந்துள்ளது.
விபூதிபுரா பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ராகவேந்திரா மற்றும் அவரது மனைவி ஸ்ருதி இடையே இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராகவேந்திரா, ஸ்ருதியை பீர் பாட்டிலால் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஸ்ருதி உயிரிழந்த நிலையில், பின்னர் ராகவேந்திராவும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு தொடர்பான இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.