தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நிலம் அளந்து தனிப்பட்டா வழங்குவதற்காக ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடையநல்லூரைச் சேர்ந்த சர்வேயர் மாரிராஜ், 36, நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்குவதற்காக லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பணத்தை வாங்கிக் கொடுத்ததாக கூறப்படும் புரோக்கர் ஜெகதீஷ், 23, மூலம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெறப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், சர்வேயர் மாரிராஜ் மற்றும் புரோக்கர் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










Leave a Reply