கோயம்புத்தூர் மக்கள் தொகை 20 லட்சத்தை நெருங்குகிறது! 2011-ஐ விட 4 லட்சம் பேர் அதிகரிப்பு

கோயம்புத்தூர் நகரின் மக்கள் தொகை 20 லட்சத்தை நெருங்கியுள்ளது!
மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகளில், கோயம்புத்தூர் நகரில் 19 லட்சத்து 90 ஆயிரத்து 186 குடியிருப்பாளர்களும், 7 லட்சத்து 29 ஆயிரத்து 500 கட்டிடங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 15 லட்சத்து 84 ஆயிரத்து 719 ஆக இருந்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, தற்போது சுமார் 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் அதிகரித்துள்ளனர்.
நகரின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகள் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கோயம்புத்தூர் நகரின் தற்போதைய மக்கள் தொகை குறித்த மேலும் துல்லியமான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.