சில்வர்ஸ்டோனில் இணைந்த முதலமைச்சர் விஜய் – அஜித்!  தேசியக் கொடியுடன் வரலாற்று தருணம்!

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் சந்தித்துக் கொண்ட காட்சி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற Michelin Le Mans Cup போட்டியின் ஐந்தாவது சுற்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்தப் போட்டியில் அஜித் குமார், Ajith RedAnt by Virage அணியின் சார்பில் களமிறங்கியிருந்தார். போட்டி நடைபெறும் இடத்தில் முதலமைச்சர் விஜய்யை அஜித் குமார் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்த காட்சி சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திரையுலகில் நீண்ட காலமாக போட்டி நட்சத்திரங்களாக பார்க்கப்பட்ட விஜய் மற்றும் அஜித், சர்வதேச பந்தயக் களத்தில் ஒன்றாகத் தோன்றிய இந்த தருணம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத காட்சியாக அமைந்துள்ளது.