நாகர்கோவில் திரையரங்கில் நள்ளிரவு பரபரப்பு! திருநங்கைகள்–பொதுமக்கள் மோதல்; பொருட்கள் சேதம் – வீடியோ வைரல்

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அருகே உள்ள பிரபல தனியார் திரையரங்கில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில், திருநங்கைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் வார்த்தை மோதல் கைகலப்பாக மாறியது.
இதையடுத்து, திரையரங்கில் இருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், அங்கிருந்த சில ஆண்கள் மற்றும் பெண்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து திரையரங்க மேலாளர் வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள், சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.