கன்னியாகுமரியில் இரவு நேர திடீர் ஆய்வு! சித்திரங்கோடு சோதனைச்சாவடியில் எஸ்.பி. அன்ஷூல் நாகர் IPS ஆய்வு – வாகனங்களை முழுமையாக சோதிக்க உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தடுக்க, காவல்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷூல் நாகர் IPS, சித்திரங்கோடு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் இரவு நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பணியில் இருந்த காவல்துறையினரிடம், சோதனைச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் முறையாகச் சோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், கனிமவளக் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் எப்போதும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
உரிய சோதனைகளை மேற்கொள்ளாமல் வாகனங்கள் அனுமதிக்கப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.