உயர்கல்வி நிறுவனங்களுக்கு நேரடி நிதியுதவி வழங்காமல், கடன் திட்டங்கள் மூலம் அரசாங்கம் நிதியை மாற்றும் நடவடிக்கை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி உதவி நிறுத்தப்பட்டால், மாணவர்களுக்கு வழங்கப்படும் Scholarship மற்றும் இலவச உயர்கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மாணவர்கள் தங்குதடையின்றி கல்வி பெறுவதற்கான சூழலை உருவாக்குவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய பொறுப்பு என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திட்டங்களின் பெயர்களை மாற்றி மறைமுகமாக செயல்படுத்தினாலும், மாணவர்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி வணிகமயமாகாமல் தடுத்து, பொருளாதார பின்னணி எதுவாக இருந்தாலும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான உயர்கல்வி வாய்ப்பு கிடைப்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply