தடையை மீறி கச்சத்தீவு செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினர் – விநாயகர் சிலையுடன் போலீசார் அழைத்துச் சென்றனர்
திண்டுக்கல்லில் தடையை மீறி கச்சத்தீவு செல்ல முயன்றதாக கூறி, பாரதிய இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவுக்கு விநாயகர் சிலையுடன் செல்ல முயன்ற பாரதிய இந்து மக்கள் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, தடையை மீறி செல்ல முயன்றதாக கூறி கட்சியினரை போலீசார் கைது செய்து, அவர்கள் கொண்டு வந்த விநாயகர் சிலையுடனேயே வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், போலீசாரின் நடவடிக்கை குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









Leave a Reply