தாராபுரம் இடைத்தேர்தலில் பரபரப்பு! சத்தியபாமாவுக்கு எதிராக “துரோகி” கோஷம் – புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் முன்னிலையில் எதிர்ப்பு!

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது.
தவெக வேட்பாளர் சத்தியபாமா, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர் அருண்ராஜ் உள்ளிட்டோருடன் ஊர்வலமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது, அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் சிலர் சத்தியபாமாவுக்கு எதிராக “துரோகி… துரோகி… வெளியே போ”, “துரோகி ஒழிக” என கோஷமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமா, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த பின்னணியிலேயே, சத்தியபாமா மீண்டும் அதே தொகுதியில் வேறு கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கோஷங்கள் எழுப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், எதிர்ப்புகளுக்கு மத்தியில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரத்தில் தற்போது தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என ஐந்து முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தாராபுரம் இடைத்தேர்தல் களம் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது