E7 தமிழ் நியூஸ் செய்தி எதிரொலி! குப்பைகள் உடனடி அகற்றம் – No.4 வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு நன்றி!

கோவை மாவட்டம் No.4 வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கிக் கிடப்பது குறித்து E7 தமிழ் நியூஸ் சார்பில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, No.4 வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படி, தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றி, அந்தப் பகுதியை சுத்தம் செய்துள்ளனர்.
மக்களின் பிரச்சினையை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்த பேரூராட்சி செயல் அலுவலருக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் E7 தமிழ் நியூஸ் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரத்தில், பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள்…
சுத்தமான சுற்றுப்புறத்தை உருவாக்குவது நிர்வாகத்தின் பொறுப்பு மட்டுமல்ல; பொதுமக்களாகிய நமது பொறுப்பும் கூட.
எனவே, பொதுமக்கள் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல், குப்பைகளை முறையாக சேகரித்து உரிய இடத்தில் மட்டுமே ஒப்படைத்து, நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க முன்வர வேண்டும் என E7 தமிழ் நியூஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் பிரச்சினை… E7 தமிழ் நியூஸ் குரல்!