“சொல்லணும்னா நேரா சொல்லலாம்!” – விஜய் சேதுபதி சர்ச்சை பேச்சுக்கு மத்தியில் அட்லீ பரபரப்பு கருத்து

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் அட்லீ பேசிய கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள், தமிழக அரசியல் தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அட்லீயின் இந்த பேச்சு அதற்கு பதிலடியாக இருப்பதாக சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
விழாவில் பேசிய அட்லீ, “சோசியல் மீடியாவில் இவரு அவரை சொல்றாரு, அவரு இவரை சொல்றாருன்னு பேசிக்கொண்டிருக்க வேண்டாம்… சொல்லணும்னா நேரா சொல்லலாம்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “அடுத்த தலைமுறை அரசியலில் ஆர்வமாக இருப்பதற்கு ஒரே காரணம் விஜய் அண்ணாதான்” என்றும், இன்றைய தலைமுறைக்கு அரசியல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும் அட்லீ தெரிவித்தார்.
அதே நேரத்தில், தான் அரசியல்வாதி இல்லை என்றும், அரசியல் அனைவருக்கும் உரியது என்றும் அட்லீ தனது பேச்சில் குறிப்பிட்டார்.
இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.