அகில இந்திய லெஜெண்ட் சரவணன் ரசிகர் நற்பணி மன்ற மாநில ஊடகப் பிரிவு தலைவியாக L. ராஜேஸ்வரி நியமனம்!

அகில இந்திய லெஜெண்ட் சரவணன் ரசிகர் நற்பணி மன்றத்தின் மாநில நிர்வாகிகள் நியமனம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
மாநில தலைவர் முத்து துரை தலைமையில் நடைபெற்ற இந்த நிர்வாகிகள் நியமனத்தில், லெஜெண்ட் சரவணனின் ஆலோசனை மற்றும் மாநில ஊடகப் பிரிவு தலைவர் D.R. பாலாஜியின் பரிந்துரையின் பேரில், பத்திரிக்கை ஆசிரியரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளருமான L. ராஜேஸ்வரி, மாநில ஊடகப் பிரிவு தலைவியாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, மாநில தலைவர் முத்து துரை அவர்கள் ராஜேஸ்வரிக்கு நியமனச் சான்றிதழை வழங்கினார்.
பின்னர், மாநில தலைவர் முத்து துரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ராஜேஸ்வரி சால்வை அணிவித்து, ஆள் உயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், மாநில ஊடகப் பிரிவு நிர்வாகிகள் ராஜேஸ்வரிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.