கோவையில் தனியார் பேருந்துகளின் அட்டகாசம்? – இருசக்கர வாகனம் மீது மோதியதில் வாகன ஓட்டி படுகாயம்!

கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில், வாகன ஓட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பேருந்துகளின் வேகமான இயக்கம் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், இதுபோன்ற விபத்துகள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
சிங்காநல்லூரில் நடைபெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தனியார் பேருந்துகளின் இயக்கத்தை கண்காணித்து, போக்குவரத்து விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் தொடரும் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க தமிழக அரசு மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.