தாராபுரத்தில் சத்தியபாமாவுக்கு மீண்டும் எதிர்ப்பு! – பெரியகுமாரபாளையத்தில் பிரசாரத்தின்போது பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குண்டடம் மேற்கு ஒன்றியம், பெரியகுமாரபாளையம் ஊராட்சியில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வேட்பாளரிடம் பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவின் பிரசாரத்தின்போது பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், பெரியகுமாரபாளையம் சம்பவமும் தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.