

கோவை, செப். 23: கோவையில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், ரோட்டரி கிளப் ஆஃப் கோவை மற்றும் ஆர்.வி.எஸ். குழும நிறுவனங்கள் சார்பில், “போதை இல்லா தமிழகம் – ஆரோக்கியமான இளைஞர்கள், வளமான தமிழகம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
ஆர்.வி.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர் கே.வி. குப்புசாமி தலைமை விருந்தினராகவும், அறங்காவலர் பாலசந்தர் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர்.
மேலும், பேராசிரியர்கள் டாக்டர் விஜய் வி.கே., டாக்டர் ஜி. மோகன்குமார், டாக்டர் எம். நடராஜன், டாக்டர் எஸ். விஜயன், டாக்டர் ஆர். சுந்தரகணபதி, டாக்டர் நீலாவேணி தங்கவேல் மற்றும் ரோட்டரி மாவட்டச் செயலாளர் சி.டி. தியாகராஜன், கே.சி. நாகராஜ், ஜான் சிங்கராயர், கேசவன், டாக்டர் வித்யா ஹரி ஐயர், வினோத் குமார், லோகநாதன் டி., எஸ். கோகுலகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள், “போதையில்லா கோவை, போதையில்லா தமிழகம்” உருவாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.













Leave a Reply