இனாம்குளத்தூர் ஊருக்குள் வராத தனியார் பேருந்து! – பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!

இனாம்குளத்தூர் பகுதியில் தனியார் பேருந்து ஊருக்குள் செல்லாமல் புறக்கணித்ததாக கூறி, பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊர் பகுதிக்குள் பேருந்து இயக்கப்படாததால், பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பேருந்தை மறித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இனாம்குளத்தூர் ஊருக்குள் தனியார் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்களின் கோரிக்கையை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.