வால்பாறை நகராட்சியில் குப்பைகளை முறையாக கையாள்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், சுகாதார அலுவலர் திரு. செந்தில் குமார் அவர்களின் முன்னிலையில், பொதுமக்களுக்கு குப்பைகளை நான்கு வகைகளாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என எடுத்துரைத்தனர்.
மேலும், குப்பைகளை ஆற்றுப் பகுதிகளிலோ, தெருவோரங்களிலோ அல்லது பொது இடங்களிலோ வீசாமல், நகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
வால்பாறையின் சுற்றுச்சூழல் மற்றும் பொதுச்சுகாதாரத்தை பாதுகாக்க, பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி, தூய்மையான நகராட்சியை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply