ஓடும் அரசுப் பேருந்தில் பெண்ணிடம் தங்கச் செயின் திருட்டு முயற்சி! – திருவட்டார் பகுதியில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், ஓடும் அரசுப் பேருந்தில் பெண் ஒருவரிடம் தங்கச் செயின் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை மர்ம நபர் ஒருவர் திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்தப் பெண் அலறியதையடுத்து, சக பயணிகளும் சத்தமிட்டதால் பேருந்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.