செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே கண்டிகை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ஆம் வகுப்பு மாணவி தொடர்பாக பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் தேர்வு நடைபெற்று கொண்டிருந்தபோது, மாணவி கழிவறைக்கு சென்ற நிலையில் மர்ம நபர்கள் சிலர் அவரை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில், தாம்பரம் மாநகர காவல்துறை வெளியிட்ட விளக்கத்தில், முதற்கட்ட விசாரணையில் பள்ளிக்குள் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டிகை பகுதியில் சாலை மறியல் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
கண்டிகை அரசு பள்ளி மாணவி விவகாரம் – பாதுகாப்பு கோரி மாணவிகள் சாலை மறியல்! விசாரணை கோரி போராட்டம்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply