40 கி.மீ. காரின் மேற்கூரையில் பயணம்! தப்பிய குட்கா கடத்தல் காரை மடக்கிய காவலர் வேல்முருகனுக்கு குவியும் பாராட்டு!

கோவை கோவில்பாளையம் பகுதியில், 300 கிலோ குட்காவுடன் தப்பிச் சென்ற கடத்தல் காரை பிடிக்க காவலர் வேல்முருகன் மேற்கொண்ட துணிச்சலான செயல் பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
வாகன சோதனையின்போது தப்பிச் சென்ற காரை போலீசார் விரட்டிச் சென்ற நிலையில், காவலர் வேல்முருகன் அந்த காரின் மேற்கூரையில் தாவி, சுமார் 40 கிலோமீட்டர் தூரம் ஆபத்தான முறையில் பயணித்து, காரை மடக்கி குற்றவாளிகளை பிடிக்க உதவியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டதுடன், 300 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரைப் பணயம் வைத்து கடமையாற்றிய காவலர் வேல்முருகனின் துணிச்சலான செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.